Tuesday, September 11, 2012

சான்றிதழில் குளறுபடி:11 பேர் ஆப்சென்ட்

ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப் பட்டுள்ளது.
சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது. பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர். அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானது தானா என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.

மதுரை: மதுரையில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 11 பேர் "ஆப்சென்ட்' ஆயினர்.மதுரை உட்பட 9 மாவட்டங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மதுரையில் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராம வர்மா தலைமை வகித்தார். மதுரை சி.இ.ஓ., நாகராஜ முருகன் உட்பட அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர். 9 மாவட்டங்களில் இருந்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர்.சேதுராம வர்மா கூறுகையில், ""மதுரையில் 2 நாட்கள் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் 544 பேர் பங்கேற்றனர். 11 பேர் "ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். "ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment