Sunday, September 23, 2012

டி.இ.டி., தேர்வில், 382 பேர், "லோ மார்க்

சென்னை: ""டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதியவர்களும் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஆறு லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன,'' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.

அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, அக்., 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, நாளை முதல், 28ம் தேதி மாலை வரை, 32 மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 6 லட்சம் விண்ணப்பங்களை, தயாராக வைத்துள்ளோம். எனவே, விண்ணப்பங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் வராது; அனைவரும், எவ்வித பிரச்னையும் இன்றி விண்ணப்பிக்கலாம்.

நவம்பரில் முடிவு: மறுதேர்வு முடிவு உள்ளிட்ட அனைத்து இறுதிக்கட்டப் பணிகளையும், நவ., 15 க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மறுதேர்வு நடப்பது, அக்., 14 ல், ஞாயிற்றுக் கிழமை. எனவே, தேவையான அளவிற்கு, தேர்வு மையங்களை அமைப்பதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. கடந்த, 6 மாதங்களில், 9 தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். குறைந்த ஊழியர்கள் இருந்தாலும், பிரச்னை இல்லாமல், பல லட்சம் விண்ணப்பங்களை கையாள்வது, எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

தகுதியிழந்தவர் 202 பேர்: ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். எனினும், சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின், இறுதியாக, 2,209 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். 37 பேர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரவில்லை. எனினும், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். 202 பேர், தகுதியிழந்துள்ளனர். உரிய சான்றிதழ்கள் இல்லாதது, குறிப்பிட்ட பாடத்தில் கல்வித் தகுதி பெறாதவர்கள் என, பல்வேறு காரணங்களால், இவர்கள் தகுதியிழந்துள்ளனர். கையெழுத்தை மாற்றிப் போட்ட விவகாரத்தில், இருவர், ஐந்து ஆண்டுகளுக்கு, டி.ஆர்.பி., தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சவுத்ரி கூறினார்.

382 பேர், "லோ மார்க்': ஏற்கனவே நடந்த, டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வில், 382 பேர், மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

முதல்தாள் தேர்வு:

ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-75

4 முதல், 9 வரை பெற்றவர்கள்-23

3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-52

இரண்டாம் தாள் தேர்வு:

ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-116

4 முதல், 9 வரை பெற்றவர்கள்-40

3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-76

No comments:

Post a Comment