Saturday, September 29, 2012

வி.ஏ.ஓ., தேர்வு: ""இப்போது எதுவும் செய்ய முடியாது"

காரைக்குடி: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை. விண்ணப்பிக்கும்போது, எதுவும் தெரிவிக்காமல், தேர்வு எழுதுவதற்கு முன்பு, ஹால் டிக்கெட் கிடைக்காததால், பலர் கட்டிய பணத்துக்கு பதில் தெரியாமல்,ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காரைக்குடி கோட்டையூரை சேர்ந்த பூரணபுஷ்கலை கூறியதாவது:

எம்.பி.சி., வகுப்பை சேர்ந்த நான் கடந்த 12.04.1971ல் பிறந்தேன். டிகிரி முடித்துள்ளேன். வி.ஏ.ஓ., தேர்வுக்காக 11.7.2012ல் விண்ணப்பித்தேன்.ஆனால் 1.7.2012ல் 40 வயது முடிந்து விட்டது என வருகிறது. இதற்கான விண்ணப்பத்தொகையை "நெட் பேங்கிங்' மூலமாக செலுத்தினேன். அப்பொழுது அப்ளிகேஷன், ஏற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது ஹால் டிக்கெட் வரும்போது, வயது முடிந்து விட்டது, என வருகிறது. எம்.பி.சி., வகுப்பை சேர்ந்த டிகிரி முடித்தவர்களுக்கு, வயது வரம்பு இல்லை, என்று சொல்கின்றனர். 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், என கூறப்படுகிறது. 18 முதல் 20 வயது உள்ளவர்களுக்கு, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 40 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்ணப்பத்துக்குரிய தொகையை வாங்கி கொண்டு, ஹால் டிக்கெட் பெறும்போது, நிராகரிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இதே போல் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பாக அவர்கள் கூறும் "டோல் ப்ரீ நம்பரில்', தொடர்பு கொண்ட போது, ""இப்போது எதுவும் செய்ய முடியாது, அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகின்றனர். கடந்த இரண்டு மாதமாக, இரவு பகல், பாராது படித்திருந்தேன். அனைத்தும் வீணாகி விட்டது, என்றார்.

 

Your application has been rejected for Under / Over aged as on 01.07.2012 as per the Notification No.26/2012
Online Reg_id
Initial
Name
Date Of Birth
Age as on
Years / Months / Days
2606144 E PANDIAN 06-04-1972 40 / 2 / 25
  * Note: Candidate may represent with valid reason / proof on or before 25.09.2012 through email: contacttnpsc@gmail.com
  (Documentary evidence to be sent as attachment with mail message)

No comments:

Post a Comment