Wednesday, September 12, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு: அக்டோபர் 4-ல் தொடக்கம்

சென்னை, செப்.11:  
பிளஸ் 2 தனித்தேர்வு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்தத் தேர்வு அக்டோபர் 16-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.முதல் முறையாக இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்.12) கடைசி தேதி ஆகும்.



 பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை விவரம்:

அக்டோபர் 4 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
அக்டோபர் 5 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
அக்டோபர் 6 - சனிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
அக்டோபர் 8 - திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
அக்டோபர் 9 - செவ்வாய்க்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
அக்டோபர் 10 - புதன்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
அக்டோபர் 11 - வியாழக்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
அக்டோபர் 12 - வெள்ளிக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்
அக்டோபர் 13 - சனிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்
அக்டோபர் 15 - திங்கள்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ், தட்டச்சு
அக்டோபர் 16 - செவ்வாய்க்கிழமை - தொழில் பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி: 
பிளஸ் 2 தனித்தேர்வுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க புதன்கிழமை (செப்.12) கடைசி தேதி ஆகும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  இணையதளத்தில் விண்ணப்பங்கள் உள்ளன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணத்துக்கான சலானையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி செப்டம்பர் 13 ஆகும்.
 ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளி அல்லது அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். அதன்பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு இந்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் உரிய இணைப்புகளை பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ செப்டம்பர் 18-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment