Monday, February 10, 2014

காட்டுத்தீ.... பூகம்பம்.... புஸ்வாணம்...!


பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஒருவர்  முன்வந்தார். திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரை பலவீனப்படுத்தும்விதமாக, அந்த கூட்டமைப்பை கூரு போட பலர் தயாராகி வருகின்றனர்.
அதனால், சங்கத்தை உடனடியாக கலைச்சுடலாம் என வடிவேலு பாணியில் முற்பட்டு, இந்த போஸ்ட்டை டைப் செய்யும் நேரத்தில், திருத்தணியில் இருந்து நண்பர் சந்தோஷ் அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவசரப்பட வேண்டாம். நான் பக்கபலமாக இருக்கிறேன். தொடர்ந்து போராடலாம் என தோள் கொடுக்க முன்வந்தார்.
அதன் பேரில், கூட்டமைப்புக்கு, குளுக்கோஸ் ஏற்றும் பணி நடந்து வருகிறது.

02/02/14 அன்று நடந்த கூட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்ட விஷயம் என்ன?

கணினி பட்டதாரிகள்
கணினி பி.எட்., பட்டதாரிகள்
கணினி எம்.சி.ஏ., பி.எட்.,
கணினி பகுதிநேர ஆசிரியர்கள்
கணினி டிகிரி மட்டும்
கணினி பட்டயம் மட்டும்
என கணினி சம்பந்தமான அனைத்து கல்வித்தகுதிகளையும்  உள்ளடக்கிய கூட்டமைப்பு இது.
 நம் அனைவரின் வேலை வாய்ப்பு குறித்து கோரிக்கை விடுக்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில், நமக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசக்கூடாது.
பேச நினைக்கும் அனைவரும் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெளிவாக கூறப்பட்டது.

பூகம்பத்தை வெடிக்கச் செய்தது யார்?

கூட்டத்திற்கு நேரில் வராமல், இது நமக்கான கூட்டம் இல்லை. இது பகுதி நேர ஆசிரியர்களுக்கானது எனவும்,
பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் எனவும்,
கிராஸ் மேஜர் டிகிரி வித் கணினி டிப்ளமோவுக்கு இல்லை எனவும் பலவாறு திரித்து வதந்திகள் பரப்பி விடப்பட்டு வருகிறது.

கூட்டத்திற்கு வந்தவர்களும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களை கூற தயங்கினர். இப்படி வீட்டில் இருந்து கொண்டு இணையத்தில் தகவல்களை  பார்த்து தெரிந்து கொள்ளலாம் என பலர் நினைப்பதாலும், குறைந்த அளவில் கூடிய கூட்டத்தில் பேசாமல் இருந்து விட்டு, பின்னால் புலம்புவதாலும், பூனைக்கு  மணி கட்டிய அந்த எலி, மிகவும் சோர்ந்து போயுள்ளது.


இந்த தளத்தின் வாயிலாக கணினி ப்டடதாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தெரிந்து கொள்ள காத்திருக்கும் இதர மாவட்ட அமைப்பினர், திருவள்ளூர் மாவட்டத்திற்காக  காத்திருக்காமல் உங்களின் நடவடிக்கையை தொடர அந்த எலி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

pandiyanve@gmail.com
computertrl@gmail.com
8148917745

No comments:

Post a Comment