Monday, December 12, 2011

தகுதித் தேர்வு கட்டாயமாக்குவதா?


வே.புகழேந்தி 
 
பள்ளிகளில்ஆசிரியர் பணியா? தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதை கேட்ட நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த பட்டதாரி பத்மநாபன் அதிர்ச்சியில் இறந்தார்.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி தமிழக அரசும் தகுதித் தேர்வு அறிவித்துள்ளது. இதை பட்டதாரிகள் எதிர்க்கின்றனர். அரசு கவலைப்படவில்லை.
�பள்ளிகளில் தரமான கல்வி வழங்க வேண்டும். அதனால் தகுதித் தேர்வு தேவை� என்கிறது அரசு.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வேண்டும் என்கிறார்கள் பட்டதாரிகள். இதுதான் இப்போதைய சர்ச்சை. அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை முடக்குவது வழக்கம். இந்த முறையும் அது நடக்கிறது. பள்ளிக் கல்வி துறையில் சமச்சீர் கல்வி தொடங்கி ஆசிரியர் பணி நியமனத்திலும் தொடர்கிறது.
அதாவது 1.4.2010க்கு பிறகு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் தகுதித் தேர்வு (டிஇடி), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி எழுத்து தேர்வு (டிசிஇ) எழுத வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். இந்த �இரட்டை தேர்வு� அறிவிப்பை கேட்டு பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தேர்வு முறையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் அதை அரசு கைவிட்டது. ஆனால், வேலை இல்லா பட்டதாரிகளால் அரசை எதிர்த்து அப்படி போராட முடியாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் காலாகாலத்தில் தேர்வு நடத்தி இருந்தால், தேர்வு எழுதி பணிக்கு வந்திருக்க முடியும். அரசுகள் பணி நியமனத்தில் செய்த குளறுபடி களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் கடந்த பிறகு இப்போது அவர்களுக்கு தேர்வு என்றால் வேலை வாய்ப்பு பதிவு அலுவலக பதிவு எதற்கு என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கனவே பி.எட் பட்டம், டிடிஇ பெற்றவருக்கு மீண்டும் தகுதித் தேர்வு என்றால், ஏற்கனவே படித்த பயிற்சி பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் வழங்கிய சான்றுகள் மீது நம்பிக்கை இல்லையா? அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்றால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டம் சரியில்லை என்று பொருளா? இரட்டை தேர்வு முறையால் ஊழல்தான் பெருகும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 60 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது எளிது. ஆனால் அதற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு எழுத வேண்டும். இங்குதான் பிரச்னை தொடங்குகிறது. அதில் மதிப்பெண்களை கூட்டியோ குறைத்தோ போடுவதற்கு வாய்ப்புள்ளதாக பட்டதாரிகள் சந்தேகிக்கின்றனர். வசதிபடைத்தவர்கள், பண பலம் கொண்டவர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என்கின்றனர்.
பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கிய பிறகு 5 ஆண்டு இடைவெளிக்குள் தகுதித் தேர்வு எழுத அவகாசம் கொடுக்கலாம். ஆனால் இது போன்ற வாய்ப்பு வழங்க அரசு தயாராக இல்லை. இதனால் இந்த முறை பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது என்று பட்டதாரிகள் வெளிப்படையாக பேசுகிறார்கள்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆர்டி) விதிப்படி ஆசிரியர் பணிக்கான தகுதி என்னவென்றால், ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு பிறகு ஒரு பி.எட் பட்டம் பெற வேண்டும் என்பதே சட்ட விதி. ஆனால் தமிழக அரசு அதை கருத்தில் கொள்ளவில்லை. பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்தால் தரமான கல்வியை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தரமற்ற கல்விக்கு காரணம் பல பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் போனது, பற்றாக்குறை ஆகியவைதான் கார ணம். என்சிஇஆர்டி கடந்த 10 ஆண்டுக்கு மேலாக எடுத்த சர்வேயில் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு, அசர்(2010 ஆண்டு கல்வி நிலை அறிக்கை) சர்வேயில் தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு இந்த அளவுக்கு தேர்ச்சி வீதம் இருந்ததா என்றால் அது சந்தேகமே என்று பட்டதாரி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் இரட்டை தேர்வை நடத்துவதில் அரசு பிடிவாதமாக உள்ளதால் பட்டதாரிகள் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அரசு தனது பிடிவாதத்தை தளர்த்தவில்லை என்றால் பல்வேறு அமைப்புகளின் போராட்டம் தீவிரமாகும். ஏற்கனவே தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் பட்டதாரிகளும் போராட்டத்தில் குதித்தால் பாதிக்கப் போவது பொது அமைதிதான்.
வெறுப்பின் உச்சியில் பட்டதாரிகள்?
பதிவு செய்து காத்திருப்போர் சுமார் 25,000. கடந்த ஆண்டில் சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் 12,000 பேர். பதிவு மூப்பு பெற்ற பட்டதாரிகள் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம், கற்றுக் கொடுக்கும் முறைகள், குழந்தைகளின் மனநிலையும் நன்கு அறிந்தவர்கள்?
புதிதாக படித்துவிட்டு வருபவர்கள் மனப்பாடம் செய்து கேள்விகளுக்கு பதில் எழுதுவார்கள். அனுபவம் இல்லாதவர்கள். 2007 முதல் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அனுபவ ரீதியாக உழைத்ததால், கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி வீதம் தலா 5 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஆர்பி தேர்வு எழுதி பணிக்கு வந்தவர்கள் இந்த சாதனையை செய்யவில்லை?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், விருப்பம் உள்ள மாநிலங்கள் தகுதித் தேர்வை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த தகுதித் தேர்வு முறை இல்லை?
எம்பிபிஎஸ் பட்டம் படித்து முடித்தவர்கள் அதற்கு பிறகு ஒரு தேர்வு எழுதினால்தான் டாக்டர் தொழில் செய்ய முடியும் என்று அரசு ஒரு முடிவு எடுத்தபோது அதை எதிர்த்து அனைத்து டாக்டர்களும் போராட்டம் நடத்தினர். உடனே அரசு அந்த முடிவை கைவிட்டது. வழக்கறிஞர்களும் தகுதித் தேர்வு எழுதி பின்னர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டத்துறை தெரிவித்தபோது அதை வழக்கறிஞர்கள் எதிர்த்ததும் கைவிட்டனர். ஆசிரியர்கள் மீது மட்டும் தகுதித் தேர்வு திணிக்கப்படுகிறது?
இந்த அரசு பொறுப்பேற்றதும் பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தெரிவித்தார். நவம்பர் 2ம் தேதி 169, 170 அரசாணைகளை வெளியிட்டார். உடனடியாக 4ம் தேதி அவர் மாற்றம் செய்யப்பட்டார். 5ம் தேதி புதிய செயலாளராக ஸ்ரீதர் பொறுப்பேற்றார். அவர் வந்ததும், 6.12.2007ல் வெளியிடப்பட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணி என்ற அரசாணை யை ரத்து செய்து முதுநிலை பட்டதாரிகளுக்கும் எழுத்து தேர்வு என்று (அரசாணை எண் 175) அறிவித்தார். 
 
இப்படி மாற்றி மாற்றி அரசாணைகள் வெளியிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
ஸ்ரீதர் வெளியிட்ட அரசாணை 181 & பக்கம் 2ல், 7வது ஷரத்து பிரிவு 2ல், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆகியவற்றில் பட்டதாரிகள் நியமிக்கும் போது என்சிஇஆர்டி விதிகளின்படி தகுதித் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்து சான்று சரிபார்ப்பு நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தகுதித் தேர்வுடன் ஆசிரியர் தேர்வு வாரியமும் போட்டித் தேர்வு நடத்தும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இது பட்டதாரிகளை ஏமாற்றுவதாக அமைந்துள்ளது. பி.எட் பட்டத்தையும் பல்கலை. பட்டங்களையும், பி.எட் கல்லூரிகளையும் அவமதிப்பதாக உள்ளது. எனவே பட்டதாரிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தாமல், தகுதித்தேர்வு, போட்டித் தேர்வு நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும் என கோருகின்றனர்.
தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார்:

No comments:

Post a Comment