Tuesday, December 6, 2011

தொழிற்கல்வி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்


ஓவியம் : எஸ்.எஸ். எல்.சி.,யுடன், தொழில் கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் 3 ஆண்டு டிராயிங் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் டிராயிங் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இதேப்போல் அரசின் தொழில்நுட்ப தேர்வில் பிரிஹேண்ட் அவுட்லைன் அன்ட் மாடல் டிராயிங் அல்லது தமிழக அரசின் மாமல்லபுர சிற்பகலை இன்ஸ்டியூட்டில் டிப்ளமோ சான்று பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.
உடற்கல்வி : பிரி யூனிவர்சிட்டியில் ஹயர்செகன்டரி அல்லது (செகன்டரி கிரேடு சீனியர் பேசிக்) டி.எஸ்.எல்.சி., முடித்து அரசின் உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ்(ஹயர் கிரேடு) பயிற்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி.,யுடன் அரசின் (லோயர் கிரேடு) பிசிக்கல் எஜிகேஷன் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதேபோல் இளங்கலையில் உடற்கல்வி பட்டம் அல்லது ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லூரியில் பி.பி. இ.எஸ்., பெற்றிருத்தல் வேண்டும்.
நேரடியாக அண்ணாமலை பல்கலையில் எம்.பி.இ.எஸ்., பட்டம்(இளங்கலை படிக்காமல்) அல்லது சென்னை ஒய்.எம்.சி.ஏ.,உடற் கல்வி கல்லூரியில் பி.எம்.எஸ்., அல்லது அதே அந்தஸ்த்தில் ஏதேனும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியில் கல்லூரியில் இளங்கலை பட்டம் அல்லது உடற்கல்வி முதுகலை முழுநேர பட்டம் பெற்றிருத்தல் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
தையல் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்கல்வி நீடில் ஒர்க் அண்ட் டிரஸ் மேக்கிங்(ஹயர் கிரேடு) மற்றும் எம்ராய்டரி மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இசை, பாட்டு: பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்கல்வியில் இசையில் இளங்கலை பட்டம் அல்லது அண்ணாமலை பல்கலையில் சங்கீத பூஷண் பட்டம் அல்லது சென்னை அரசு தேர்வுத்துறையால் சங்கீத வித்வான் விருதுடன் ஆசியர் பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாதிரி விண்ணப்பங்கள் சி.இ.ஓ., அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், மருத்துவமனை வீதி, விழுப் புரம் என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண் டும். விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டுமென மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ.,(பொ) குப்புசாமி தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment