Saturday, December 10, 2011

பள்ளி தரம் உயர்வில் வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை

அரசு நடுநிலைபள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியதில்,கல்வியில் பின் தங்கிய வட மாவட் டங் களுக்கு முக்கியத்துவம்அளிக்கப்பட்டு,அங்குஅதிகமானபள்ளிகள் தர உயர்த்தப்பட்டுள்ளனநடப்பு கல்வியாண்டில், 710 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில், 710 பள்ளிகள், 32 மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், கல்வியில் பின் தங்கியுள்ள திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகமான பள்ளிகளை தரம் உயர்த்தி, அரசு அறிவித்துள்ளது. தென் மாவட் டங்களில், குறைவான பள்ளிகளே தரம் உயர்த்தப் பட்டுள்ளன.வேலூர் மாவட்டத்தில் 33, திருவண்ணாமலை 47, விழுப்புரம் 63, கடலூர் 44 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 47 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், 36 பள்ளிகளும், தர்மபுரியில், 42 பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.மிகக் குறைவாக, சென்னை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள், கன்னியாகுமரி 5, நீலகிரி 7, கோவை மாவட்டத்தில் 11 பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், 9 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment