Sunday, December 25, 2011

பகுதிநேர ஆசிரியர் நியமனம் தாமதமாகிறதா?

பகுதிநேர ஆசிரியர் நியமனப் பணிகளை செய்ய, பெரும்பாலான மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல்கள் அனுப்பப்படாததால், என்ன செய்வது என தெரியாமல், அதிகாரிகள் முழித்து வருகின்றனர். இதனால், 26ம் தேதி துவங்க இருந்த நேர்முகத் தேர்வு, மேலும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு:
16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வுக்கு, கடந்த 19ம் தேதியில் இருந்து, வரும் 25ம் தேதி வரை, நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும் என்றும்; 26ம் தேதியில் இருந்து, நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.ஆனால், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, இன சுழற்சி வாரியாக, பதிவுமூப்பு பட்டியல் வரவில்லை. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பதிவுமூப்பு பட்டியல் இன்னும் பெறப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி நேர்முகத் தேர்வு துவங்குமா என்பது, கேள்விக்குறியாகி உள்ளது.

அடுத்த வாரத்தில்
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, "இன சுழற்சி அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், பதிவுமூப்பு பட்டியலை அனுப்ப வேண்டும். இந்த பட்டியலை வைத்து தான், நேர்முகத் தேர்வை நடத்த முடியும்' என்றனர்.மேலும், ""பெரும்பாலான மாவட்டங்களில், இந்த பட்டியல்கள் வந்து சேரவில்லை; அடுத்த வாரத்தில் தான் பட்டியல்கள் கிடைக்கும். அதன்பின், நேர்முகத் தேர்வில் பங்கு பெறுவோருக்கான கடிதங்களை அனுப்ப வேண்டும்,'' என்றனர்.

நடக்குமா?
 சென்னை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட, 326 பணியிடங்களுக்கு, 1,400 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், ஒரு நாளைக்கு, 100 பேர் முதல், 120 பேர் வரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். 12 நாட்கள் வரை, நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.ஜனவரி 15ம் தேதிக்குள், நேர்முகத் தேர்வு பணிகளை முடித்து, 16ம் தேதி முதல் பணி நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்து இருந்தது

No comments:

Post a Comment