Friday, December 9, 2011

பி.எட்., பட்டத்தை திரும்ப ஒப்படைப்பது

பெரம்பலூர்: பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத்தலைவர் அழகமுத்து தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு ஆகிய இரண்டையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்யவில்லையெனில், பி.எட்., பட்டத்தை ஆசிரியர் பல்கலைக்கழகத்திலும், பதிவு மூப்பு அட்டையை வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் திரும்ப ஒப்படைப்பது.

தமிழ்நாடு பதிவு மூப்புப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினக்குமார் தலைமையில் டிச., 11ம் தேதி திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே அன்னதான மண்டபத்தில் நடைபெற உள்ள மாநில பொதுக்கூட்டத்தில் பதிவு மூப்பு எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர்கள், நிலுவையிலுள்ள நியமன ஆசிரியர்கள், பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



DINAMALAR

No comments:

Post a Comment